1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. madurai high court order on ctr nirmal kumar

அமைச்சருக்காக திருப்பரங்குன்றம் கோவிலில் விதிமீறலா?!. அறிக்கை கேட்கும் நீதிமன்றம்!..

nirmal kumar
பாரதீய ஜனதா கட்சி மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளிலும் பயணித்தவர் சி.டி.ஆர் நிர்மல் குமார். ஆனால் ஒரு கட்டத்தில் நடிகர் விஜய் தவெகவை துவங்கிய போது தன்னை தவெகவில் இணைத்துக்கொண்டார். திருப்பரங்குன்றம் தொகுதியில் தவெக வேட்பாளராக போட்டியிட்ட சி.டி.ஆர் நிர்மல்குமார் அந்த தொகுதியில் ஒரு லட்சத்து 14 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தற்போது தவெக ஆட்சி அமைந்திருக்கும் நிலையில் நிர்மல் குமாருக்கு அமைச்சரவையில் இடம் கிடைத்திருக்கிறது..

மின்சாரம் மற்றும் சட்டத்துறை இவருக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில், இவர் திருப்பரங்குன்றம் கோயிலுக்கு சென்றிருந்தபோது அவருக்காக கோயில் நடை தாமதமாக சாத்தப்பட்டதாகவும், கோவில் கருவறைக்குள் சென்று நிர்மல்குமார் வழிபாடு செய்ததாகவும் சர்ச்சை எழுந்திருக்கிறது.

இதனையடுத்து அறநிலையத்துறை செயலாளர் அறிக்கை தாக்கல் செய்யவேண்டுமென மதுரை உயர்நீதிமன்ற நீதிபதி சுவாமிநாதன் உத்தரவிட்டிருக்கிறார்..
About Writer
பாலகிருஷ்ணன்