தொடர்புடைய செய்திகள்
- சாத்தான்குளம் வழக்கு!. மேல்முறையீடு செய்தால் தீர்ப்பு மாறுமா?.. வழக்கறிஞர்கள் சொல்வது என்ன?..
- சாத்தான்குளம் வழக்கில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!.. சிபிஐ தரப்பு வாதம்!..
- நீதிமன்றத்தில் நிகிதா அளித்த சம்மதம்.. நகைத்திருட்டு வழக்கை முடித்து வைத்தது நீதிமன்றம்..!
- அஜித்குமார் கொலை வழக்கு!.. போலீஸுக்கு பாடம் புகட்டுவோம்!.. உயர்நீதிமன்றம் காட்டம்!...
- விஜய் பிரச்சாரத்தில் சதி நடந்திருக்கிறது.. நீதிமன்றத்தை நாடிய தவெக! - நாளை விசாரணை!
சாத்தான்குளம் குற்றவாளிகளுக்கு அவகாசம்!. தினமும் விசாரணை!.. நீதிமன்றம் அதிரடி..
தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்திய வழக்குகளில் சாத்தான்குளம் கொலை சம்பவமும் ஒன்று. தனிவிரோதம் காரணமாக சாத்தான்குளம் காவல் நிலையத்தை சேர்ந்த போலீஸ அதிகாரிகள் அந்த பகுதியில் வசித்துவந்த ஜெயராஜ் மற்றும் அவரின் மகன் பென்னிக்ஸ் இருவரையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று இரவு முழுவதும் அடித்து சித்ரவதை செய்து கொலை செய்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வடமாநில ஊடகங்கள் கூட இந்த செய்தி பற்றி பேசின. இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ஸ்ரீதர் மற்றும் சப் இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட காவலர்கள் 10 பேரை போலீசார் கைது செய்தனர். அதில் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிறையில் உயிரிழந்தார்.
கடந்த சில வருடங்களாகவே நடந்து வந்த இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை விதித்து சமீபத்தில் நீதிபதி தீர்ப்பளித்தார். ஆனால், இதை எதிர்த்து குற்றவாளிகள் மேல்முறையீட்டு மனுக்களை தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் ஒன்பது பேரும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை அமர்வு கால அவகாசம் வழங்கியிருக்கிறது. குற்றவாளிகளுக்கான தண்டனையை உறுதிப்படுத்த கூடிய முனு தொடர்பான விசாரணை ஜூன் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. மேலும், ஜூன் 4ம் தேதிக்கு பிறகு நாள்தோறும் விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிமன்றம் அறிவித்திருக்கிறது..