1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Madras Eye Infection Warning Issued by Doctors

தமிழகத்தில் அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ நோய்.. மருத்துவர்கள் எச்சரிக்கை..!

மெட்ராஸ் கண் தொற்று
மெட்ராஸ் எனப்படும் கண் தொற்று நோய் அவ்வப்போது பொதுமக்களை பாதித்து வரும் நிலையில், தற்போது மெட்ராஸ் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். 
 
சமீப காலமாக மெட்ராஸ் தொற்று நோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும், மெட்ராஸ் எளிதில் குணப்படுத்தக்கூடிய ஒரு சாதாரண நோய் என்றாலும், அதை முதலிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றும், காலம் தாழ்த்தினால் பார்வையில் கோளாறு ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 
கண் எரிச்சல், வெளிப்பகுதி சிவந்து காணப்படுதல், கண்ணில் இருந்து நீர் வந்து கொண்டே இருப்பது, இமைப்பகுதி ஒட்டிக்கொள்ளுதல் ஆகியவை மெட்ராஸ் பாதிப்பின் அறிகுறிகள் என்றும், இந்த அறிகுறிகள் தெரிந்தால் உடனடியாக கண் மருத்துவரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 
கடந்த சில வாரங்களாக தினமும் ஐந்து பேருக்கு மெட்ராஸ் பாதிப்பு இருப்பதை உறுதி செய்துள்ள மருத்துவர்கள், அவர்களில் குழந்தைகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பது கவலைக்குரிய விஷயமாக உள்ளது என்று கூறியுள்ளனர்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
கொளுத்தும் வெயிலில் குளிர்விக்க வரும் மழை! இன்று 20 மாவட்டங்களில் மழை வாய்ப்பு!