ஆர்கே நகர் தோல்வி குறித்து அதிமுக அவைத்தலைவரும், அதிமுக சார்பில் போட்டியிட்டு தோல்வியை தழுவியவருமான மதுசூதனன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த கடிதம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆர்கே நகர் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என அமைச்சர் ஜெயக்குமார் உள்ளடி வேலைகள் பார்த்ததாகவும், தோல்விக்கு காரணமான ஜெயக்குமாரை அமைச்சரவையில் இருந்து தூக்க வேண்டும் எனவும் மதுசூதனன் போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்கள் வருகின்றன. ...