திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 31 ஆகஸ்ட் 2023 (11:14 IST)

திருவாரூரில் வீட்டிற்குள் புகுந்த லாரி.. ஏற்கனவே இதேபோல் 2 முறை புகுந்ததாக தகவல்..!

திருவாரூர் மாவட்டத்தில் வேகமாக வந்த லாரி வீட்டிற்குள் புகுந்த நிலையில் அந்த வீட்டில் இருந்த ஐந்து பேர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் என்ற பகுதியில் லாரி ஒன்று சாலையில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த ஒரு வீட்டுக்குள் புகுந்தது. 
 
இந்த விபத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ஐந்து பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இதே வீட்டிற்குள் இரண்டு முறை லாரி புகுந்ததாகவும் அப்போதும் அந்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாகவும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் வீட்டிற்குள் லாரி புகுந்து விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து காவல்துறையினர் லாரி டிரைவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
 
 
Edited by Siva