வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. மு‌ன்னோ‌ட்ட‌ம்
Written By Siva
Last Modified: ஞாயிறு, 27 ஆகஸ்ட் 2023 (15:24 IST)

வீடு கட்டும் போது கண்டெடுக்கப்பட்ட 9 சிலைகள்: கோடிக்கணக்கில் மதிப்பு என தகவல்..!

வீடு கட்ட அஸ்திவாரம் தோண்டும் போது ஒன்பது சிலைகள் கிடைத்ததாகவும் அவை ஐம்பொன் சிலைகளாக இருக்க வாய்ப்பு இருப்பதாகவும் இந்த சிலைகள் கோடி கணக்கான மதிப்பு உடையது என்றும் கூறப்படுகிறது. 
 
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே திருநாரையூர் என்ற பகுதியில் ஒருவர் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரம் தோண்டினார். அப்போது ஒன்பது சிலைகள் கண்டெடுக்கப்பட்டன 
 
அவை ஐம்பொன் சிலைகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் சோதனைக்கு பின்னரே அது ஐம்பொன் சிலையாக அல்லது உலக சிலையா என்பது தெரியவரும். 
 
முதலில் ஐந்து சிலைகள் கிடைத்த நிலையில் குழி தோண்ட தோண்ட சிலைகள் வந்து கொண்டே இருந்தன என்றும் இதுவரை 9 சிலைகள் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
 இது குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்தில் உடனடியாக மாவட்ட எஸ்பி, வருவாய் துறை, அறநிலை துறை அதிகாரிகள் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
Edited by Siva