திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. இந்து
Written By Mahendran
Last Modified: புதன், 30 ஆகஸ்ட் 2023 (18:48 IST)

தினமும் பிரதோஷ பூஜை நடைபெறும் சிவன் கோவில் இதுதான்..!

Thiruvarur Ther
பொதுவாக சிவன் கோயிலில் 15 நாட்களுக்கு ஒரு முறை வரும் பிரதோஷ நாட்களில் மட்டுமே பிரதோஷ பூஜை செய்யப்படும் ஆனால் திருவாரூரில் உள்ள கோவிலில் தினமும் 4:30 முதல் 6:00 மணி வரை நித்ய பிரதோஷ பூஜை நடத்தப்படுகிறது. 
 
இந்த நேரத்தில் தியாகராஜரை முப்பத்து முக்கோடி தேவர்களும் தரிசனம் செய்வதாக ஐதீகமாக கருதப்படுகிறது. மேலும் இந்த கோயிலுக்கு மாலை வேலையில் சென்றால் அனைத்து தேவர்களின் அருளையும் பெறலாம் என்று முன்னோர்கள் கூறுவது உண்டு. 
 
மேலும் சிதம்பர ரகசியம் போல திருவாரூருக்கு பின் உள்ள மூலஸ்தானத்திலும் ஒரு ரகசியம் இருப்பதாக முன்னோர்கள் கூறி வருகின்றனர்.  தமிழகத்தில் உள்ள தேர்களில், திருவாரூர் தேர் தான் மிகவும் பெரியது என்பதும் இந்த கோயிலுக்கு உள்ள ஒரு சிறப்பாக உள்ளது.
 
Edited by Mahendran