திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 30 ஆகஸ்ட் 2023 (18:32 IST)

மரக்கிளையில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய மினி லாரி...

thenkasi-mini lorry
தென்காசி, மாவூர்சத்திரம் அருகே மரக்கிளையில் சிக்கி ஒரு மினி லாரி அந்தரத்தில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி,  பாவூர்சத்திரம் அருகேயுள்ள ஆவுடையார் இந்தியா நகர் பகுதிக்குச் செல்லும்  நெடுஞ்சாலையில் மரங்கள் அடர்த்தியாக உள்ளது.

இதனால் அந்த சாலையின் வழியே செல்லும்போது, பேருந்துகள், லாரிகள் மீது வாகனங்கள் உரசுவதாக கூறி வந்தனர்.

இதுபற்றி சமூக ஆர்வலர்கள் பலர் நெடுஞ்சாலை துறையினரிடம் ‘இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதாகக் கூறி’ புகார் அளித்தனர்.

ஆனால் எந்த  நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது. இந்த நிலையில்,  பாவூர்சத்திரம் மாடக்கண்ணுப்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணியன் இன்று தன் மினி லாரியில், தண்ணீர்கேன் போட்டுவிட்டு அதேவழியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அந்த மரக்கிளையின் மீது மினி லாரி மோதி அந்தரத்தில் தொங்கியது.

அருகில் இருந்தவர்கள் லாரியில் இருந்து ஓட்டுனர் சுப்பிரமணியனை மீட்டனர்….

இந்தச் சம்பவம்  அப்பகுதியில் பரபப்பு ஏற்படுத்தியுள்ளது.