வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : திங்கள், 28 ஆகஸ்ட் 2023 (20:29 IST)

மணல் லாரி தொல்லை : வாங்கல் காவல் நிலையத்தில் பொதுமக்கள் புகார்

karur
கரூர் அருகே மணல் லாரி தொல்லை பற்றி வாங்கல் காவல் நிலையத்தில் வாங்கல் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்தனர்.
 
கரூரிலிருந்து வாங்கல், மோகனூர் வழியாக நாமக்கல் செல்லும் பிரதான சாலையாக இருந்து வருகிறது.
 
காவிரி ஆற்றில் இருந்து வாங்கல் வழியாக மணல் எடுத்து வரும் லாரி, மணல் குவாரியில் நிரப்பி வைத்து பின்னர் மற்ற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லும் வகையில் மணல் வியாபாரிகள் ஏற்பாடு செய்யப்பட்டு வைக்கப்பட்டுள்ளனர்.
 
இந்த நிலையில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து பிரதான கிராமமான வாங்கலில் வந்து பொருட்கள் வாங்கி செல்வதும் அதேபோல அரசு மருத்துவமனை, அரசு பள்ளி, காவல் நிலையம், கூட்டுறவு வங்கி என முக்கிய பகுதிகளாக இருந்து வருகிறது வாங்கல் கிராமம்.
 
இந்நிலையில் நாள்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகள் காவிரி ஆற்றில் இருந்து மணல் எடுத்துச் செல்லும் லாரியின் தொந்தரவு அதிகமாக உள்ளது, லாரியில் இருந்து மணல் கீழே விழுவதால் மாசு தொல்லை ஏற்படுகிறது, 
 
இதனால் எங்கள் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்படுகிறது, 
 
மேலும் மாசு தொல்லையால் உடல் உபாதை தொல்லை ஏற்படுகிறது, எனவே நூற்றுக்கணக்கான லாரிகள் வாங்கல் கடைவீதி வழியாக செல்வதை தவிர்த்து மாற்று பாதையில் அமைத்து மணல் லாரி செல்ல வழி வகை செய்ய வேண்டும் என வாங்கல் காவல் நிலையத்தில் வியாபாரிகள் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
 
பேட்டி : மோகனசுந்தரம் - வாங்கல் பகுதி பொதுமக்கள்