ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Updated : திங்கள், 17 ஜூன் 2019 (21:18 IST)

இரு வேறு சாலை விபத்துகளில் மூவர் பலி! சிலருக்கு காயம்!பரபரப்பு சம்பவம்

ஈரோடு மாவட்டம்பவானிசாகர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நேற்று ஒரு காரில் திருச்சியில் நடந்த சுபகாரிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு இன்று ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் சென்றுகொண்டிருந்த கார் கரூர் மாவட்டம் பவுத்திரம் அருகே செல்லும்போது கார் ஓட்டுநர்  கண்ணயர்ந்ததால் அருகில் உள்ள பாலத்தின் மீது மோதி கார் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
 
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த இருவர் பலியாகினர் மேலும் சிலர் காயமடைந்துள்ளனர். சம்பவம் குறித்து பரமத்தி காவல்துறையினர் பலியானவர்கள் குறித்த விவரங்களை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 
இதே போல் கரூர் வெங்கமேடு பகுதில் கரூரை நோக்கி வந்து கொண்டிருந்த மினி பேருந்து இருசக்கர வாகனத்தின் பின்புறம் மோதியதில் சம்பவ இடத்திலேயே தனியார் வங்கி ஊழியர் சங்கர் (29) பலியானர் இவரது உடலை கைபற்றிய வெங்கமேடு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இறந்தவரின் உடலை கரூர் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர்