'ஹீரோ' மாதிரி கணவன் , பல பெண்களை ஏமாற்றிவிட்டார் - மனைவி போலீஸில் புகார்

kerala
Last Modified வியாழன், 20 ஜூன் 2019 (19:02 IST)
சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த தேவிகா என்பவர்,தன் கணவர் மீது பல குற்றச்சாட்டுக்களை கூறியுள்ளார். இந்தச் சம்பவம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தன் புகார் மனுவில் தேவிகா கூறியுள்ளதாவது :
 
கேரளாவில் வசிக்கும் ஜோதி என்ற பெண் எனக்குத் தொலைபேசியில் தொடர்ப்பு பேசினார். அதில் அஜித் தன்னை கடந்த 1996 ஆம் ஆண்டு மணந்தார். எங்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். பின்னர் 2002 ஆம் ஆண்டு டெலிலா என்பவரை கலியாணம் செய்தார். மேலும் ஒரு பெண்ணுடன் அவருக்கு தொடர்பு உள்ளதாகக் கூறினார்.
 
இதுகுறித்து நான் கணவர் அஜித்திடன் கேட்ட போது, இதுபற்றி வெளியே சொன்னால் என்னைக் கொன்று விடுவதாக மிரட்டினார் என்று தேவிகா கூறியுள்ளார். 
 
தற்போது தேவிகா அளித்துள்ள மனுவில் : எனது கணவர் அஜித்துக்கும் எனக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு திருமணம் ஆனது. எங்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான். ஆனால் சில வருடங்களுக்கு முன்னர் கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டோம் என்று தெரிவித்துள்ளார்.
 
தேவிகா கொடுத்த புகாரின் அடிப்படையில் அஜித்தை கைதுசெய்துள்ள போலீஸார்  : அஜித் ஹீரோ போன்று இருப்பதால் பல பெண்களை ஏமாற்றியதாகத் தெரிகிறது.....தேவிகா மட்டுமே அவர் மீது புகார் கூறியுள்ளார். தற்போது அவரிடம் பல பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தது தொடர்பாக விசாரித்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.
 


இதில் மேலும் படிக்கவும் :