புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 20 ஜூன் 2019 (17:24 IST)

பேத்தி கண்முன்னே தாத்தாவுக்கு நடந்த சோகம்! திடுக் சம்பவம்

அரியலூர் மாவட்டம் பெரியார் நகரில் வசிப்பவர் முருகேசன். இவர் தனது பேத்தியுடன் சின்னக்கரை தெருவில் உள்ள மெடிக்கல் கடைக்கு மருந்து வாங்க சென்றார். 
மருந்து வாங்கிவிட்டு தனது இரு சக்கா வாகனத்தில் ஏறி அமந்திவிட்டு தனது பேத்தியை அழைத்து வாகனத்தில்  ஏறுமாறு அழைத்தார். பேத்தியும் பைக்கில் ஏற முயன்றார். அந்த நேரம் பார்த்ஹ்டுஒரு லாரி வந்து முருகேசனின்  வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் முருகேசன் படுகாயம் அடைந்தார். 
 
அருகில் இருந்தவர்கள் இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உடனடியாக முருகேசனை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். தற்போது அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.
 
மருந்தகத்திற்கு முன்பு நடந்த இந்த விபத்து அங்குள்ள  சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்தகாட்சி காண்போரை பதைபதைக்க வைத்துள்ளது.