புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 20 ஜூன் 2019 (18:00 IST)

சென்னை அண்ணா மேம்பாலத்தில் தாறுமாறாக ஓடிய அரசு பேருந்து: 4 பேர் காயம்

சென்னை தேனாம்பேட்டையில் தாறுமாறாக ஓடிய மாநகர பேருந்து ஒன்று மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் காயம் அடைந்ததாக தகவல்கள் வெளிவந்துள்ளது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
சென்னை அண்ணா மேம்பாலத்தில் இருந்து தேனாம்பேட்டை பகுதிக்கு இறங்கிய ஒரு பேருந்தின் பிரேக் வயர் திடீரென அறுந்ததால் அந்த பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறி தாறுமாறாக ஓடியது. இதனை அடுத்து அந்த பேருந்து, சாலையில் சென்றவர்கள் மீது மோதியதால் ஏற்பட்ட விபத்தில் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த விபத்தால் அண்ணா மேம்பாலம் முதல் தேனாம்பேட்டை வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டதோடு அந்த பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது
 
அரசு பேருந்துகளை முறையாக பராமரிக்க வேண்டும் என்று பயணிகளும் பொதுமக்களும் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்துவந்தும், போக்குவரத்து துறை நிர்வாகம் அதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை என இந்த விபத்தை நேரில் பார்த்த சிலர் கருத்து தெரிவித்தனர்.