நெருப்பு வளையத்தில் சூரிய கிரகணம்.. வெறும் கண்களால் பார்க்கலாமா??
வரும் 26 ஆம் தேதி நெருப்பு வளையத்துடன் சூரிய கிரகணம் தோன்றும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூரியன், பூமி, நிலவு, இந்த மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும்போது, சூரியனை நிலவு மறைக்கும். இதுவே சூரிய கிரகணம். வருகிற டிசம்பர் 26 ஆம் தேதி இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகண நிகழ்வு தோன்றுகிறது. இது நெருப்பு சூரிய கிரகணம் என்னும் அரிய வகை சூரிய கிரகணம் என கூறப்படுகிறது.
காலை 8 மணியில் இருந்து 3 மணி வரை இந்த சூரிய கிரகணம் தெரியும் எனவும், இதனை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது எனவும் முதுநிலை விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் என்பவர் கூறியுள்ளார். இந்த கிரகணம் கோவை, அவினாசி, ஈரோடு, சிவகங்கை, கரூர் உள்ளிட்ட 10 இடங்களில் தெளிவாக தெரியும் எனவும், சென்னையில் பகுதி அளவே தெரியும் எனவும் கூறியுள்ளார்.
சூரிய கிரகணத்தை பார்க்க, மாநிலம் முழுவதும் சிறப்பு ஏற்பாடுகளை தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செய்துவருவது குறிப்பிடத்தக்கது.