வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (13:32 IST)

”அதிமுகவுக்கு மனசாட்சியே இல்லை”.. விளாசும் சிதம்பரம்

குடியுரிமை திருத்த சட்ட விஷயத்தில் அதிமுகவிற்கு மனசாட்சியே இல்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆங்காங்கே வன்முறைகளும் கலவரங்களும் உருவாகி வருகின்றன.இதில் பல உயிரிழப்புகளும் ஏற்பட்டு வருகின்றது.

இச்சட்டத்தை எதிர்த்து எதிர்கட்சிகள் போராடி வரும் நிலையில் அதிமுக இதற்கு ஆதரவு அளித்துள்ளது. இந்நிலையில் இது குறித்து முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப சிதம்பரம் ”இந்தியாவை ஜெர்மனாக மாற்ற குடியுரிமை சட்டத்தை கையிலெடுத்துள்ளார்கள். அதனை தடுக்க வேண்டும்” என கூறியுள்ளார்.

மேலும், ”குடியுரிமை திருத்த சட்டம் குறித்து அதிமுகவுக்கு மனசாட்சி உறுத்தவில்லை. மனசாட்சி இருந்தால் தானே உறுத்துவதற்கு” எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.