புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: சனி, 21 டிசம்பர் 2019 (14:02 IST)

திமுக குழந்தை மாதிரி அடம்பிடிக்கிறது! – ஆர்.பி.உதயகுமார் கருத்து

குடியுரிமை சட்ட விவகாரத்தில் திமுக குழந்தையை போல் அடம்பிடிப்பதாக அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக சார்பில் அனைத்து கட்சி பேரணி நாளை மறுநாள் சென்னையில் நடைபெற இருக்கிறது. இந்த பேரணியில் கலந்து கொள்ள மற்ற அரசியல் கட்சிகள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் பொது மக்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேசிய அதிமுக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ” மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை திருத்த சட்டத்தில் எந்த குறையும் இல்லை. குறை காண முடியாதபடி சரியாகதான் உள்ளது. ஆனால் திமுக போராட்டம் நடத்தியே தீருவேன் என குழந்தையை போல அடம் பிடிக்கிறது” என்று கருத்து தெரிவித்துள்ளார்.