வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : சனி, 21 டிசம்பர் 2019 (14:14 IST)

திமுக நடத்தும் பேரணியில் கமல்ஹாசனின் ம.நீ.ம பங்கேற்காது ....

இந்தியாவில் பாஜக தலைமையிலான மத்திய அரசு ஆட்சி செய்து வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் ’இந்திய குடியுரிமைச் சட்ட திருத்தம்’ 
பாரளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், டெல்லி , மும்பை, உத்தரபிரதேசம், தமிழகம், கேரளம் உள்ளிட்ட மாநிலங்களில்
மாணவர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட எல்லோரும் போராடி வருகின்றனர்.
 
இந்நிலையில் தமிழக எதிர்க்கட்சி தலைவரான திமுக தலைவர் ஸ்டாலின்,  வரும் 23 ஆம் தேதி குடியுரிமை சட்டத் திருத்ததுக்கு எதிராகப் போராட்டடம் நடத்துவதாக தெரிவித்தார். திமுகவுடன் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்கும்  என்று  தெரிக்கப்பட்டது.
இதையடுத்து திமுக கட்சி சார்பில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து, போராட்டத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
 
இந்நிலையில், இன்று, கமல்ஹாசன்,  குடியுரிமை சட்டத் திருத்ததுக்கு எதிராக திமுக நடத்தும் போராட்டத்தில் ம.நீ.ம  பங்கேற்காது என  தகவல் வெளியாகிறது.
 
திமுக பேரணியில்   பங்கேற்க இயலாத காரணத்தை ஸ்டாலினிடம் மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகள் விளக்கியதாகவும் தகவல்கள் வெளியாகிறது.
 
மேலும், இதுகுறித்து முறையான அறிவிப்பை திமுக வெளியிடும் என  ம.நீ. ம நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.