1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Kutralam falls closed for tourists

குற்றாலத்தில் பயணிகள் குளிக்கத்தடை – அதிகமான தண்ணீர்வரத்து !

குற்றாலம்
குற்றால அருவிகளில் தண்ணீர் போக்குவரத்து அதிகமாகி வருவதால் பயணிகள் குளிக்கத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையில் தென் மேற்கு பருவமழைப் பெய்துவருவதால் தமிழக மற்றும் கேரள எல்லையோரப் பகுதிகளில் உள்ள அருவிகளில் தண்ணீர் வரத்து அதிகமாகி உள்ளது. தமிழகத்தின் முக்கியமான சுற்றுலாத் தளங்களில் ஒன்றான குற்றாலா அருவிகளிலும் இதேப் போல தண்ணீர் வரத்து அதிகமாகியுள்ளது.

குற்றாலத்தில் உள்ள 5 அருவியில் நேற்று மாலை முதலே சுற்றுலாப்பயணிகளுக்கு குளிக்க தடைவிதிக்கப்பட்ட நிலையில் மெயின் அருவியில் இன்று காலை முதல் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் குற்றாலம் வந்த சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்து திரும்புகின்றனர்.

 
அடுத்த கட்டுரையில்
கமல் பிக்பாஸில் பிஸியாக இருக்கிறார் – வம்புக்கு இழுக்கும் ஜெயக்குமார் !