வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 14 மார்ச் 2019 (16:43 IST)

போலீஸ் காமகொடூரன்களுக்கு வேலை பாக்குறாங்க.! கொதித்தெழுந்த அருவி பட நடிகை!

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 20 பேர் கொண்ட கும்பல் சமூகவலைத்தளங்களை தவறான வழியில் பயன்படுத்தி கல்லூரி, பள்ளி மாணவிகள் என 200க்கும் மேற்பட்ட பெண்களை மிரட்டி அவர்களை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்த விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட காமக்கொடூரன்களை கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் பலமாக ஒலித்து வருகின்றன.


 
காம வெறியர்களின் இந்த செயலை கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் , மக்கள் என அனைவரும் தங்கள் எதிர்ப்புகளை தெரிவித்துவருகின்றனர்.  இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு நடிகர், நடிகைகளும் கண்டனம் தெரிவித்ததையடுத்து தற்போது அருவி பட  நடிகை அதிதி பாலன் இந்த சம்பவம் குறித்து பேசியுள்ளார். 
 
இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். அந்த வகையில் தற்போது அருவி படத்தில் நடித்த அதிதி பாலன் " போலீசார் பாதிக்கப்பட்டோருக்கு நியாயத்தை தேடி தராமல் குற்றவாளிகளுக்கு போன் செய்து நீங்கள் பத்திரமாக இருங்கள் என்று கூறியுள்ளனர், போலீஸ் சிட்டிசன்களை நியாயமான முறையில் பாதுகாக்கவேண்டும், போலீசார் தங்கள் வேலையை  ஒழுங்காக செய்தலே பாதி குற்றங்களை தடுக்கலாம்  என்று அவர் கூறியுள்ளார்.