வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 8 பிப்ரவரி 2019 (19:54 IST)

அருவி நாயகியின் அடுத்தப் படம் – கோலிவுட் ரசிகர்கள் ஏமாற்றம் !

அருவிப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்காத இடம்பிடித்த நடிகை அருவி பாலனின் அடுத்தப் படத்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அருன் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் உருவான அருவிப் படம் 2017 ஆம் ஆண்டு இறுதியில் வெளியாகி மக்களிடையே ஏகோபித்த ஆதரவைப் பெற்றது. அதில் அருவிக் கதாபாத்திரத்தில் நடித்த அதிதி பாலன் ஒரேப் படத்தில் உச்சப் புகழை அடைந்தார். அதன் பின் பலப் படங்களில் இருந்து நடிக்க அழைப்பு வந்தும் வலுவானக் கதாபாத்திரம் அமையாததால் நடிக்க மறுத்து வந்தார்.

இதையடுத்து ஒன்றரை வருட இடைவெளிக்குப் பின்னர் இப்போது தனது அடுத்தப் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார்.  சந்தோஷ் சிவன் இயக்கும் புதியப் படமான ஜேக் அண்ட் ஜில் படத்தில் காளிதாஸ் ஜெயராம் மற்றும் மஞ்சு வாரியரோடு இணைந்து நடிக்க இருக்கிறார். ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விஷயமாக இந்தப் படம் மலையாளத்தில் மட்டுமே உருவாகி வருகிறது.

இதனால் அதிதி பாலனின் அடுத்தப் படம் எப்போது என எதிர்பார்த்துக் காத்திருந்த கோலிவுட் ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு சிறிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.