1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 3 ஜூன் 2019 (19:31 IST)

அருவி இயக்குனரின் அடுத்த படைப்பில் இணைந்த முன்னணி நடிகர்!

அருவி படத்தின் இயக்குனரின் அடுத்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

 
கடந்த 2017ம் ஆண்டு புதுமுக இயக்குனர் அருண் பிரபு இயத்தில் வெளியான அருவி படம் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு இந்த படத்திற்காக பல்வேறு விருதுகளும் வழங்கபட்டது. இப்படத்தை அடுத்து அருண் பிரபுவின் அடுத்த படத்தை  சிவகார்த்திகேயன் தயாரிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
இந்நிலையில் கனா படத்தை அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் உருவாகியுள்ள நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், தன்னுடைய தயாரிப்பில் உருவாகும் 3-வது படத்தை அருவி பட இயக்குநர் அருண் பிரபு இயக்க இருப்பதாக அறிவித்தார். இப்படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.


 
மேலும் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூன்றாவதாக தயாரிக்க இருக்கும் படத்தை பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அருவி என்ற படத்தை இயக்கிய வெளியிட்டுள்ளார். அப்படத்தில்  முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து எடுக்க இருப்பதாகவும் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார் .