1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. KS Alagiri says about tea party

இல்லாத மழையை காரணம் காட்டி தேநீர் விருந்து ரத்து: கே.எஸ். அழகிரி கிண்டல்..!

alagiri
இல்லாத மழையை காரணம் காட்டி கவர்னர் தேநீர் விருந்தை ரத்து செய்துள்ளார் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே எஸ் அழகிரி தெரிவித்துள்ளார். 
 
சுதந்திர தினத்தின் போது ஆளுநர் தேநீர் விருந்து வைப்பது வழக்கமானது ஒன்று என்றும் இதில் முதலமைச்சர் உள்பட எம்எல்ஏக்கள் கலந்து கொள்வார்கள் என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் கவர்னரின் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள மாட்டேன் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார். அவரை அடுத்து காங்கிரஸ் கட்சியும் தனது கட்சி எம்எல்ஏக்கள் தேநீர் விருந்தில் கலந்து கொள்ள மாட்டார்கள் என்று தெரிவித்திருந்தது. 
 
இந்த நிலையில் தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாக கவர்னர் மாளிகை அறிவித்திருந்தது. மழை காரணமாக தேநீர் விருந்து ரத்து செய்யப்படுவதாகவும் தேநீர் விருந்து நடத்தும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டிருந்தது. 
 
இந்த நிலையில் அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமிக்கு மட்டும் தேநீர் தர ஆளுநருக்கு சந்தோஷம் இல்லை என்றும் எங்கள் கூட்டணி சென்று டீ குடித்தால்தான் அவருக்கு சந்தோசம் மரியாதை என்றும் கே எஸ் அழகிரி தெரிவித்தார். 
 
இல்லாத மழையை காரணம்  காட்டி தேநீர் விருந்து ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
ஜெயலலிதா தான் எனக்கு நன்றிக்கடன் பட்டவர்: திருநாவுக்கரசர்