வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 15 ஆகஸ்ட் 2023 (15:00 IST)

பிரதமர் மோடி அடுத்த ஆண்டு அவரது வீட்டில் தேசிய கொடி ஏற்றுவார்: மல்லிகார்ஜுன கார்கே

Mallikarjun Kharge
அடுத்த ஆண்டும் சுதந்திர தினத்தில் நான் பிரதமராக கொடியேற்றுவேன் என்று பிரதமர் மோடி இன்று காலை சுதந்திர தின உரையில் பேசினார். அப்போது நாட்டிற்காக செய்த ஆயிரக்கணக்கான சாதனைகளை எடுத்து கூறுவேன் என்றும் அவர் தெரிவித்தார்.
 
 இந்த நிலையில் இதற்கு பதிலடி கொடுத்துள்ள காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘பிரதமர் மோடி அடுத்த ஆண்டு அவரது வீட்டில் கொடியேற்றுவார் என்றும்  செங்கோட்டையில் ஏற்ற மாட்டார் என்றும் அவர் தெரிவித்தார். 
 
செங்கோட்டையில் அடுத்த ஆண்டும் கொடியேற்றுவேன் என்று அவர் கூறியது அகந்தையின் உச்சம் என்றும் அழியாது தெரிவித்தார்.
 
 ஏற்கனவே பிரதமர் மோடி செங்கோட்டையில் கொடியேற்றுவது இன்றுதான் கடைசி என்று மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
Edited by Siva