1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Chennai to Madurai vaigai express

வைகை எக்ஸ்பிரஸ் ரயிலின் 46-வது பிறந்தநாள்.. கேக் வெட்டி கொண்டாடிய பயணிகள்!

வைகை எக்ஸ்பிரஸ்
சென்னை - மதுரை இடையே செல்லும் வைகை எக்ஸ்பிரஸ் ரயில் தொடங்கி 46 ஆண்டுகள் ஆகிய நிலையில் பயணிகள் அதனை கேக் வெட்டி கொண்டாடினர் 
 
கடந்த 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி தான் சென்னை - மதுரை இடையிலான வைகை எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டது. தென் மாவட்ட மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கும் இந்த ரயில்  இந்தியாவின் அதிவிரைவு ரயில் என்ற பெருமையை பெற்றது.  
 
இந்த நிலையில் இந்த ரயில் இயக்கப்பட்டு 46 ஆண்டுகள் ஆனதை எடுத்து பயணிகள் கேக் வெட்டி ரயில் ஓட்டுநருக்கு மரியாதை செய்து உற்சாகமாக கொண்டாடினார். இது குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.
 
Edited by Siva
About Writer
Siva
அடுத்த கட்டுரையில்
3 வயது குழந்தைக்கு எலிக்காய்ச்சல் சிகிச்சைக்கு பதிலாக தவறான சிகிச்சை- எடப்பாடி பழனிசாமி