வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 18 மே 2022 (09:59 IST)

செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க ரஷ்யாவுக்கு தடை! – இந்திய செஸ் கூட்டமைப்பு!

சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் ரஷ்யா பங்கேற்க தடை விதிக்கப்பட்டிருப்பதாக இந்திய செஸ் கூட்டமைப்பு செயலாளர் தெரிவித்துள்ளார்.

44வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி ரஷ்யாவில் நடைபெற இருந்த நிலையில், ரஷ்யா – உக்ரைன் போர் காரணமாக ரஷ்யாவில் நடக்கவிருந்த போட்டி நிறுத்தப்பட்டது. அதற்கு பதிலாக இந்த போட்டி தற்போது சென்னை அருகே மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை தமிழக மற்றும் மத்திய அரசு இணைந்து மேற்கொண்டு வருகிறது. இந்த போட்டிகள் ஜூலை 28ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ளது. 200 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட செஸ் விளையாட்டு வீரர்கள் இதில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த போட்டிகளில் நடப்பு சாம்பியனான ரஷ்யா கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டிருப்பதாக இந்திய செஸ் கூட்டமைப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார். மேலும் சீனாவில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதால் சீன விளையாட்டு வீரர்கள் யாரும் பதிவு செய்யவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.