1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. KP Ramalingam completely dismissed from DMK

கே.பி.ராமலிங்கம் டிஸ்மிஸ்: அதிரடி காட்டிய திமுக தலைமை!!

DMK
திமுகவில் இருந்து கே.பி.ராமலிங்கம் டிஸ்மிஸ் செய்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
 
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கொரோனா முன்னெச்சரிக்கை குறித்து அனைத்துக் கட்சி கூட்டம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்து வந்த நிலையில் கே.பி.ராமலிங்கம் அனைத்து கட்சி கூட்டம் தேவையில்லை என அறிக்கை விட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
 
கட்சியின் முடிவுகளுக்கு எதிராக அறிக்கை விடுத்ததாக கே.பி.ராமலிங்கம் திமுக மாநில விவசாய அணி செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். ஆனாலும் தொடர்ந்து கட்சி அடிப்படை உறுப்பினர் பதவியில் நீடித்து வந்தார். இதனையடுத்து கே.பி.ராமலிங்கத்தை அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் தற்காலிகமாக விலக்குவதாக திமுக கட்சி தலைமை அறிவித்தது. 
 
இந்நிலையில், தற்போதைய தகவலின் படி திமுகவில் இருந்து கே.பி.ராமலிங்கத்தை டிஸ்மிஸ் செய்து அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எதற்காக இந்த முடிவு என தகவல் வெளியிடப்பட்டவில்லை. 
About Writer
Sugapriya Prakash
அடுத்த கட்டுரையில்
வங்கதேசத்தின் முதல் அதிபரை கொலை செய்த முன்னாள் ராணுவ வீரர் தூக்கிலிடப்பட்டார்