செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (16:05 IST)

தெய்வீக வழியில் தேசியம்: மோடியை ஏகத்துக்கும் புகழ்ந்த ராஜேந்திர பாலாஜி!

அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மோடியை புகழ்ந்து சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். 
 
கொரோனா பீதி நாடு முழுவதும் பரவியுள்ள நிலையில் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் பேட்டி அளித்தது பின்வருமாறு, சுகாதாரத் துறை, காவல்துறை வருவாய்த்துறை போன்ற பல்வேறு துறை அதிகாரிகளின் செயல்பாடுகள் போற்றத்தக்க வகையில் உள்ளது. வல்லரசு நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனோ கட்டுப்பாட்டில் உள்ளதற்கு மத்திய அரசு எடுத்த தீவிர நடவடிக்கையை காரணம்.
 
தேசியத்தையும் தெய்வீகத்தையும் உலகிற்கு பறைசாற்றி அரசியல் நடத்திய முத்துராமலிங்கத் தேவரின் வழியில் பிரதமர் மோடி தெய்வீக வழியில் தேசிய உணர்வை ஊட்டுகிறார். கொரோனோ தடுப்பில் பிரதமர் மற்றும் முதல்வரின் நடவடிக்கைகளை கேலி, கிண்டல் பேசுவோர் சமூக விரோதிகள். 
 
நாட்டிற்கு உதவி செய்யாதவர்கள் தான் குறை சொல்வார்கள். திண்ணயில் அமர்ந்து வெட்டிப்பேச்சு பேசுவர்களின் வீனர்களின் பேச்சை கேட்காமல் நமது சமூக பணியை விடாமல் மேற்கொண்டால் கொரோனோ பாதிப்பிலிருந்து இந்தியா மீட்கப்படும் என தெரிவித்துள்ளார்.