திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 8 ஏப்ரல் 2020 (14:51 IST)

வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ள மக்களுக்கு ரூ.10 ஆயிரம் தர வேண்டும் – டி.ஆர். பாலு

உள்நாட்டு தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த மோடி திட்டமிட்டுள்ளதாகவும், ஏப்ரல் 8 ஆம் தேதி காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களுடனும் ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ளதாக  நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஜோஷி தெரிவித்திருந்த நிலையில் இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையில்  காணொலியின் மூலம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் திமுக சார்பில் கலந்துகொண்ட டி ஆர் பாலு, கூட்டத்திற்கு பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது :

 
கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கருத்து வேறுபாடுகளை மறந்து மத்திய, மாநில அரசுகள் பணியாற்ற கோரினேன் ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க பிரதமரிடம் வலியுறுத்தினேன் என திமுக எம்.பி  டி.ஆர்.பாலு
 தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கருத்து வேறுபாடுகளை மறந்து மத்திய, மாநில அரசுகள் பணியாற்ற கோரியுள்ளேன். நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு ரூ.10 ஆயிரம், நடுத்தர மக்களுக்கு ரூ. 5 ஆயிரம் நிவாரணம் தர கோரியுள்ளேன என  தெரிவித்தார்.