ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 31 ஜூலை 2024 (19:09 IST)

கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில் வழித்தடம்.. திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம்

Metro Train
சென்னை கோயம்பேடு - ஆவடி இடையே மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்க, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
 
கோயம்பேட்டில் இருந்து பாடி, அம்பத்தூர் வழியே ஆவடி வரை தோராயமாக 16 கி.மீ தூரத்திற்கு, 15 உயர்மட்ட மெட்ரோ நிலையங்களுடன் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வ 
 
இந்த நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக ஒரே தூணில் இரண்டு அடுக்கு மெட்ரோ பாலம் போரூர் - ஆழ்வார் திருநகர் இடையே சுமார் 5 கி.மீ. தொலைவுக்கு அமைகிறது என தகவல் வெளியாகியுள்ளது.  
 
கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி இடையேயான வழித்தடம் (4th Phase) மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான வழித்தட (5th Phase) ரயில்கள் இந்த இரண்டு அடுக்குகளில் இயக்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஒரே தூணில் 4 மெட்ரோ ரயில்கள் செல்லும் வகையில்  பிரமிக்க வைக்கும் டபுள் டெக்கர் பாலம் கட்டப்பட்டு வரும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
 
Edited by Mahendran