1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 25 ஜூலை 2024 (16:22 IST)

சென்னை மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர்., ஜெயகுமாரின் அதிர்ச்சி பதிவு..!

தமிழகத்தில் கஞ்சா உள்பட போதை பொருள் அதிகம் பயன்படுத்தப்படுவதாகவும் சர்வ சாதாரணமாக பெட்டி கடைகளுக்கு கூட விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. 
 
ஆனால் தமிழ்நாட்டில் போதைப் பொருள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் போதைப்பொருள் விற்பவர் மீதும் பயன்படுத்துவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் காவல்துறை போதைப் பொருள் விவகாரத்தில் தீவிர நடக்கவடுக்கை எடுத்து வருவதாகவும் தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த நிலையில் சென்னை மெட்ரோ ரயிலில் ஒரு இளைஞர் போதைப்பொருள் பயன்படுத்தும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் இந்த புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருப்பதாவது: 
 
பரபரப்பாக இயங்கும் சென்னையில் மக்கள் அதிகம் கூடும் மெட்ரோ ரயிலில் கஞ்சா பயன்படுத்திய இளைஞர். தமிழ்நாட்டில் தடைசெய்யப்பட்ட போதை பொருட்களின் புழக்கம் அதிகரித்து சட்டம் ஒழுங்குக்கு சவால் விடும் போதை ஆசாமிகள். கஞ்சா 2.0, 3.0, 4.0 என வெற்று விளம்பரம் மட்டுமே செய்யும் ஸ்டாலின், இனிமேலாவது சட்டம் ஒழுங்கு மீது கவனம் செலுத்துவாரா? என கேள்வி எழுப்பியுள்ளார். முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரின் இந்த பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran