புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 15 ஏப்ரல் 2023 (11:38 IST)

திமுகவில் இணைந்த கோவை செல்வராஜூக்கு புதிய பொறுப்பு !

kovai selvaraj5
அதிமுகவிலிருந்து திமுகவிற்கு வந்தவர்களுக்கு பல பொறுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது என்பதும் குறிப்பாக செந்தில் பாலாஜி ஒரு வலிமையான அமைச்சராக இருந்து வருகிறார் என்பதும் தெரிந்ததே. 
 
அந்த வகையில் சமீபத்தில் அதிமுகவிலிருந்து திமுகவுக்கு வந்தவர்களில் ஒருவர் கோவை செல்வராஜ் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுக ஓபிஎஸ் அணியில் இருந்த அவர் அதன் பிறகு அந்த அணியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தார். 
 
இந்த நிலையில் அவருக்கு தற்போது புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. திமுக செய்தி தொடர்பு துணைச் செயலாளராக கோவை செல்வராஜை நியமித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் உத்தரவு பெற்றுள்ளார் 
 
இதனை அடுத்து புதிய பொறுப்பை பெற்றுள்ள கோவை செல்வராஜ் முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதிமுகவில் இருந்த திமுகவுக்கு வந்தவர்கள் அனைவருமே தற்போது நல்ல பதவியில் இருந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran