வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 14 ஏப்ரல் 2023 (14:52 IST)

ரூ.200 கோடி லஞ்சம் பெற்றார் மு.க.ஸ்டாலின்: அண்ணாமலை குற்றச்சாட்டு

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் ஷெல் கம்பெனிகளிடம் இருந்து ரூபாய் 200 கோடி லஞ்சம் பெற்றார் என அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். 
 
திமுக பிரமுகர்களின் சொத்து பட்டியலை வெளியிட்ட பின்னர் அவர் பேசியபோது சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் போது ஷெல் கம்பெனிகளிடம் இருந்து முதல்வர் மு க ஸ்டாலின் 200 கோடி லஞ்சம் பெற்றார் என்று தெரிவித்தார். 
 
இந்த திட்டத்திற்கு ஜிகா நிறுவனம் 59% மத்திய அரசு 15 சதவீதம் மாநில அரசு 21 சதவீதம் நிதிகளை தந்தன என்று  அண்ணாமலை தெரிவித்தார். டெண்டர் முடிய சில நாட்கள் இருக்கும்போது ஒரு திருத்தம் கொண்டு வந்தார்கள் என்றும் டென்டரில் சுங்கவரியை சேர்க்க போகிறோம் என்ற திருத்தம் தான் கொண்டு வந்தார்கள் என்றும் அவர் தெரிவித்தார். 
 
மேலும் இந்த திட்டத்திற்காக இரண்டு நாடுகளை சேர்ந்த ஷெல் நிறுவனங்கள் 2011 ஆம் ஆண்டு தேர்தல் நிதிக்காக ரூபாய் 200 கோடி முக ஸ்டாலினுக்கு கொடுத்தார்கள் என்றும் இது குறித்து நானே சிபிஐக்கு புகார் அளிக்க போகிறேன் என்றும் அண்ணாம்லை தெரிவித்துள்ளார்.
 
Edited by Siva