கோயம்பேடு டூ கோடம்பாக்கம்: கொரோனா மையமாகும் சென்னை!
கொரோனா பாதிப்பு கோயம்பேடு முதல் கோடம்பாக்கம் வரை பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனாவினால் ஏற்படும் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னையில் எதிர்பார்த்ததை விட பலமடங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1724.
திருவிக நகரில் 357 பேர்களும், ராயபுரம் பகுதியில் 299 பேர்களும், கோடம்பாக்கம் பகுதியில் 257 பேர்களும், தேனாம்பேட்டையில் 206 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கு மண்டலங்களை தவிர மொத்த சென்னையிலும் 605 பேர்களுக்குத்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
கோயம்பேடு பரவலால் கோடம்பாக்கத்தில் கடந்த சில நாட்களாக தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், நேற்று ஒரே நாளில் 58 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோயம்பேடு பரவல் காரணமாக கோடம்பாக்கத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 250-ஐ கடந்துள்ளது என கூறப்படுகிறது.