1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 5 மே 2020 (11:52 IST)

கொரோனா பாதிப்பு: மொத்த சென்னையிலும் 1724, ஆனால் 4 மண்டலங்களில் மட்டும் 1119!

கொரோனாவினால் ஏற்படும் பாதிப்பு தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. குறிப்பாக சென்னையில் எதிர்பார்த்ததை விட பலமடங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சற்றுமுன் சென்னை மாநகராட்சி வெளியிட்ட தகவலின்படி சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 1724 பேர் இருப்பதாக அறிவித்துள்ளது. ஆனால் இதில் 4 மண்டலங்களில் மட்டுமே பாதிக்கும் மேற்பட்டவர்கள் உள்ளனர். அதாவது 4 மண்டலங்களில் 1119 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 
 
குறிப்பாக திருவிக நகரில் 357 பேர்களும், ராயபுரம் பகுதியில் 299 பேர்களும், கோடம்பாக்கம் பகுதியில் 257 பேர்களும், தேனாம்பேட்டையில் 206 பேர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நான்கு மண்டலங்களை தவிர மொத்த சென்னையிலும் 605 பேர்களுக்குத்தான் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 
எனவே இந்த நான்கு மண்டலங்களையும் சீல் வைத்து சென்னையின் மற்ற பகுதிகளை காப்பாற்ற வேண்டும் என்றும், இந்த நான்கு மண்டலங்களில் முழு ஊரடங்கை அமல்படுத்தி கொரோனாவின் தாக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடப்பட்டுள்ளது