வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 5 மே 2020 (11:46 IST)

சென்னையில் மட்டும் சரக்கு கிடையாது! – அதிர்ச்சியான குடிமகன்கள்!

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. மூன்றாம் கட்ட ஊரடங்கு மே 17 வரை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு வருகின்றன.  தமிழகத்திலும் மே 7 முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. தற்போது தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள சூழலில் டாஸ்மாக் கடைகளை திறக்கக்கூடாது என பலர் வலியுறுத்தி வருகின்றனர். ஆனாலும் மதுக்கடைகள் திறக்க இருப்பதால் மது பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிலையில் சென்னையில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் சென்னையில் மட்டும் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. சென்னையில் டாஸ்மாக் கடைகள் எப்போது திறக்கப்படும் என்ற தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் மதுக்கடைகள் திறக்கப்படும் நிலையில் சென்னையில் மட்டும் திறக்கப்படாதது சென்னையில் உள்ள மது பிரியர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.