1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Updated : சனி, 23 ஏப்ரல் 2022 (11:08 IST)

பெண் உதவி ஆய்வாளருக்கு கத்திக்குத்து: நெல்லையில் பரபரப்பு

knife
நெல்லையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் உதவி ஆய்வாளர் ஒருவரை மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
நெல்லை சுத்தமல்லி அருகே கோவில் பாதுகாப்பு பணியில் பெண் காவல் உதவி ஆய்வாளர் மார்க்ரெட் கிரேஸி என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென மர்ம நபர் ஒருவர் அந்தப் பெண் உதவி ஆய்வாளர் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு திடீரென கத்தியால் எடுத்து சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது
 
இதனை அடுத்து உதவி ஆய்வாளர் மார்க்ரெட் கிரேஸி அவர்கள் நெல்லையில் உள்ள மருத்துவமனையில் படுகாயங்களுடன் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் பெண் காவல் உதவி ஆய்வாளரை கத்தியால் குத்திய நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது