1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 24 பிப்ரவரி 2022 (19:40 IST)

விவாகரத்து தர மறுத்த மனைவியை கத்தியால் குத்திய போலீஸ் கைது!

விவாகரத்து தர மறுத்த மனைவியையும் மகளையும் கத்தியால் குத்திய தலைமை காவலர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்துகிறது 
 
சென்னை தலைமையகத்தில் செக்யூரிட்டி தலைமை காவலராக பணிபுரிந்து வருபவர் ராஜேந்திரன் என்பவருக்கு பூர்ணிமா என்பவருக்கு கடந்த 2005ஆம் ஆண்டு திருமணம் நடந்தது 
 
இந்த தம்பதிக்கு மூன்று மகள்கள் இருக்கும் நிலையில் கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் என்றும் ராஜேந்திரன் கூற அதற்கு பூர்ணிமா மறுத்ததாக தெரிகிறது
 
 இது குறித்த வாக்குவாதம் முற்றிய நிலையில் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் வயிற்றில் ராஜேந்திரன் குத்தியதாகவும், அதை தடுக்க வந்த மகளையும் குத்திவிட்டு தப்பி சென்றதாகவும் கூறப்படுகிறது 
 
கத்தியால் குத்தப்பட்ட பூர்ணிமா மற்றும் அவரது மகள் பத்மினி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையிடம் காவலர் ராஜேந்திரன் சரணடைந்து உள்ளதாக கூறப்படுகிறது