1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. kn nehru may be arrested by ed soon

FIR போட்ட லஞ்ச ஒழிப்புதுறை!.. கே.என்.நேருவுக்கு சிக்கல்!.. விரைவில் கைது?..

kn nehru
திமுக முன்னாள் அமைச்சர் கே.என் நேருவுக்கு தொடர்பான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். கடந்த ஆட்சி காலத்தில் நேரு அமைச்சராக இருந்தபோது டெண்டர் கொடுப்பதில் நிறைய முறைகளில் நடந்ததாக அமலாக்கத்துறை கூறியது. எனவேதான், திருச்சி, கோவை, சென்னை என பல இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையின் நேற்று சோதனை செய்தார்கள்..

இந்நிலையில்,  கே.என் நேரு கைது செய்யப்பட வாய்ப்பிருப்பதாக பார்க்கப்படுகிறது. ஏனெனில் அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு மாநில காவல்துறை உள்ளிட்ட புலன் விசாரணை பின் முதல் தகவல் அறிக்கை(FIR) அவசியம். திமுக ஆட்சியில் FIR   பதிவு செய்யப்படாத நிலையில் தற்போது FIR பதிவு செய்துள்ளதால் அமலாக்கத்துறை விசாரணையை தொடங்க முடியும்..

இதன் அடிப்படையில் சட்டவிரோதப் பண பரிமாற்ற வழக்கில் கே.என்.நேரு கைது செய்யப்பட வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே லஞ்ச ஒழிப்புத்துறை செந்தில் பாலாஜி மீது FIR  பதிவு செய்ததால்தான் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையை கைது செய்தது குறிப்பிடத்தக்கது..
About Writer
மகேந்திரன்
14 ஆண்டுகள் பல்வேறு இணையதள செய்தி பிரிவில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, ஆன்மிகம், தொழில்நுட்ப செய்திகள் எழுதுவதில் அனுபவம் உள்ளவர்..... Read More
அடுத்த கட்டுரையில்
மிசா குறித்து பேசும்போது முதல்வர் விஜய்யின் சைகைக்கு என்ன அர்த்தம்.. நெட்டிசன்கள் கூறும் தகவல்கள்..