வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 12 பிப்ரவரி 2019 (15:31 IST)

டிக் டாக்கிற்கு தடை: சட்டப்பேரவையில் அமைச்சர் அதிரடி!!!

சமூக வலைதளங்களான பேஸ்புக், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை முழுமையாக தற்போது டிக் டாக் வீடியோக்கள் ஆக்கரமிக்க ஆரம்பித்துள்ளன. அவற்றில் திறமையை வெளிக்காட்டும் வீடியோ என்பது மிகவும் குறைவானதே. 
 
பெரும்பாலும் ஒன்றுக்கும் உதவாத ஆபாச வீடியோக்களே. தமிழ் பாடல்களுக்கு அல்லது தமிழ் படங்களில் வரும் ஆபாசக் காட்சிகளுக்கு வாயசைப்பதோதான் நிரம்பிக் கிடக்கிறது.
 
டிக் டாக் மீது சமீபகாலமாக பல்வேறு வகையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. 12 வயதிற்குட்பட்டோர் டிக் டாக்கை உபயோகப்படுத்தக் கூடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் யாரும் அதை சரியாகப் பின்பற்றுவதில்லை.
 
இந்தோனேசியா போன்ற நாடுகள் டிக் டாக்கிற்கு தடை விதித்துள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் டிக் டாக் செயலிக்கு தமிழகத்தில் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்தது. 
 
இந்நிலையில், கலாச்சாரத்தை சீரழிக்கும் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்க சட்டமன்ற உறுப்பினர் தமீமுன் அன்சாரி கோரிக்கை விடுத்தார். இதற்கு அமைச்சர் மணிகண்டன் டிக் டாக்கை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இது குறித்து மத்திய அரசிடம் தமிழக அரசு பரிந்துரை செய்யும் என்றார்.