நாடாளுமன்ற தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு: இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி

VM| Last Modified சனி, 9 பிப்ரவரி 2019 (06:40 IST)
வரும் மக்களவைத் தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு? என்ற கேள்வி அவரது தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் பதில் அளித்துள்ளார். 


 
நெல்லை மாவட்டம், வடக்கன்குளத்தில் இயக்குநர் சந்திரசேகர்  நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், 
"வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி மீண்டும் ஆட்சியைப் பிடிக்கக் கூடாது என்பதுதான் தமிழர்களின் முடிவு. இதில் அனைவரும் தெளிவாக உள்ளனர்
 
கடந்த 40 ஆண்டுளாக சினிமா துறையில் இருந்து வருகிறேன். அப்போது நாணயம் இருந்தது. இப்போது 'தமிழ் ராக்கர்ஸ்’ படங்களைப் போட்டி போட்டு சமூக வலைதளங்களில் வெளிடுவதால்தான் சினிமா அழிந்து வருகிறது.
 
சினிமாவை காப்பாற்ற 
அரசால் தான் முடியும். சமீபகாலத்தில் சினிமா துறையில் வியாபாரிகள் வந்துவிட்டனர். சினிமா என்பது காதலித்து செய்யக் கூடியது. தமிழ் ராக்கர்சை அரசால் தான் ஒழிக்க முடியும்.
 
வரும் மக்களவைத் தேர்தலில் விஜய்யின் ஆதரவு யாருக்கு? என்பதை அவரிடம் தான் கேட்க வேண்டும். எனது மகன் விஜய்யை டாக்டராக்க வேண்டும் என விரும்பினேன். ஆனால், அவர் ஆக்டராகிவிட்டார் "  இவ்வாறு  சந்திரசேகர் கூறினார். 


இதில் மேலும் படிக்கவும் :