தொடர்புடைய செய்திகள்
- பாலியல் தொல்லையால் மேலும் ஒரு பிளஸ் 2 மாணவி தற்கொலை: அதிர்ச்சி தகவல்!
- கோவையில் கொடூரமான தற்கொலை முயற்சி! – போராடி காப்பாற்றிய மருத்துவர்கள்!
- ஆன்லைன் ரம்மி விளையாட்டில் பணம் இழந்த நபர் தற்கொலை
- தோழியின் தாய் திட்டியதால் மாணவி தற்கொலை
- கனவில் வந்து பயமுறுத்திய பேய்? பயத்தில் தற்கொலை செய்துக் கொண்ட காவலர்!
கரூர் மாணவி தற்கொலை விவகாரம்: பள்ளி நிர்வாகம் விளக்கம்!
கரூரில் பிளஸ்டூ மாணவி ஒருவர் சமீபத்தில் தற்கொலை செய்து கொண்ட நிலையில் இதுகுறித்து பள்ளி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கரூரில் பிளஸ்டூ மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கிய நிலையில் இதுகுறித்து பள்ளி நிர்வாகம் மாணவர்கள் பெற்றோர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது
அதில் மாணவியின் தற்கொலையில் ஆசிரியர்களுக்கும், பள்ளி நிர்வாகத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் காவல்துறை விசாரணைக்கு பின் கண்டுபிடிக்கப்படும் குற்றவாளிக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பதில் பள்ளி நிர்வாகம் உறுதியாக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
மேலும் சமூக வலைதளங்களில் பள்ளியை பற்றி வரும் கருத்துக்களுக்கு மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் செவி சாய்க்க வேண்டாம் என்றும் அந்த விளக்க அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
