காருக்கு வரி கட்டாதவர் ஊழல் பத்தி பேசுகிறார்!. விஜயை பொளக்கும் கருணாஸ்!...
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று நடந்த செயல்வீரர்கள் கூட்டத்தில் மிகவும் ஆவேசமாக பேசினார்.. இதுவரை திமுகவை மட்டுமே கடுமையாக விமர்சனம் செய்து வந்த விஜய் நேற்று அதிமுகவையும் விமர்சித்தார். திமுக ஒரு தீய சக்தி என்றால் அதிமுக ஒரு ஊழல் அடிமைக் கட்சி.. ஆண்ட கட்சியும் சரி.. இப்போது ஆண்டு கொண்டிருக்கும் கட்சியும் சரி.. செய்த ஊழலை நான் எப்போதும் செய்ய மாட்டேன்.. ஊழல் ஊழல் இல்லாத ஆட்சியை நான் அமைப்பேன். என் மீது ஊழல் கறைபடியாது என தெரிவித்தார்.
திமுகவும், அதிமுகவும் அந்த கட்சியின் பெயரில் உள்ள அண்ணாவை மறந்துவிட்டன.. அவரின் கொள்கைகளை தூக்கி எறிந்து விட்டு தொடர்ந்து ஊழலை மட்டுமே செய்து வருகிறார்கள்.. அதிமுக பாஜகவுக்கு அடிமையாக இருக்கிறது என்றெல்லாம் விமர்சித்து பேசினார்.
இதையடுத்து விஜய்க்கு பதிலடி கொடுத்த அதிமுக ஐடி விங் தான் நடிக்கும் படத்தில் பிளாக் டிக்கெட் மூலம் கோடிக்களை சம்பாதித்த விஜய்தான் முதல் ஊழல்வாதி. பனையூர் பண்ணையார் என்றெல்லாம் அவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில், இதுபற்றி செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு பதில் சொன்ன முக்குலத்தோர் படை தலைவர் மற்றும் நடிகர் கருணாஸ் வெளிநாட்டு காரை வாங்கி அதுக்கு வரியை கட்டாமல் விஜய் கோர்ட்டுக்கு போனது எல்லோருக்கும் தெரியும்.. அதையெல்லாம் மக்கள் பார்த்தார்கள்.. இவருக்கு ஊழலை பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.