திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 31 மார்ச் 2024 (07:23 IST)

நாம் தமிழர் கட்சி வருத்தப்படும்.. வாபஸ் பெற்ற கரும்பு விவசாயி சின்னம் பெற்ற வேட்பாளர்..!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் கரும்பு விவசாயி சின்னம் பெற்ற நிலையில் அந்த சின்னத்தால் நாம் தமிழர் கட்சியினர் வருத்தப்படுவார்கள் என்று கூறி  மனுவை  வாபஸ் பெற்றதாக செய்திகள் வெளியாகி உள்ளது.

 நாம் தமிழர் கட்சிக்கு கடந்த சில தேர்தலில் கரும்பு விவசாயி சின்னம் ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த சின்னம் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒரு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால் ஒலிவாங்கி சின்னம் நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்  திருப்பூர் தொகுதியில் கரும்பு விவசாயி சின்னத்தை பெற்ற பாரதிய மக்கள் ஐக்கிய கட்சி சார்பில் சந்திரசேகரன் என்பவர் போட்டியிட்ட நிலையில் அவர் திடீரென நேற்று தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்றார்.

இது குறித்து அவர் செய்தியாளரிடம் பேசிய போது ’கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தேன், ஆனால் நாம் தமிழர் கட்சியின் சின்னத்தை நான் பெற்றுள்ளதால் அவர்கள் வருத்தப்படுவார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன். நாம் தமிழர் கட்சி நல்ல கட்சி, தமிழகத்தின் மக்களுக்காக உழைக்கும் கட்சி ,எனவே எனது மனசாட்சி அந்த சின்னத்தில் போட்டியிட இடம் தரவில்லை, அதன் காரணமாக மனுவை வாபஸ் பெற்றேன்’ என்று கூறியுள்ளார்.

Edited by Siva