வி.சி.க கட்சிக்கு பானை சின்னம் கிடைக்கும்- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன்!
திருச்சி விமான நிலையத்தில் வி.சி.க தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
வி.சி.க போட்டியிடும் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிகளில் வேறு யாரும் பானை சின்னம் கேட்டு விண்ணப்பிக்காததால் வி.சி.க விற்கு பானை சின்னம் கிடைக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.
பானை சின்னம் கேட்டு ஒன்னறை மாதங்களுக்கு முன்பே விண்ணப்பித்திருந்தோம் இருந்தாலும் சின்னம் எங்களுக்கு ஒதுக்கப்படவில்லை.
பா.ஜ.க நிரந்தரமாக ஆட்சியில் இருக்கும் என்கிற எண்ணத்தில் தேர்தல் ஆணையம் அவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறது.
தேர்தல் ஆணையம் சுதந்திரமாக இயங்கவில்லை.
பா.ஜ.க மற்றும் சங்பரிவாரிகள் கட்டுப்பாட்டில் உள்ளது.
பா.ஜ.க விற்கு ஆதரவாக செயல்படும் தேர்தல் ஆணையம் எப்படி நேர்மையாக தேர்தலை நடத்துவார்கள் என தெரியவில்லை.
நடைபெற உள்ள தேர்தல் மக்களுக்கும் பா.ஜ.க விற்கும் நடக்கும் இரண்டாம் சுதந்திர போர். அதில் மக்கள் தான் வெற்றி பெறுவார்கள்.
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதை கண்டித்து நாளை இந்தியா கூட்டணி சார்பில் டெல்லியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கிறேன்
பா.ஜ.க பட்டியலினத்திற்கு எதிரானது, சமூக நீதிக்கு, அரசியலமைப்புக்கி எதிரானது. அதனை உணர்ந்து அந்த கட்சியிலிருந்து பா.ஜ.க மாநில பட்டியல் இன தலைவர் அந்த கட்சியிலிருந்து வெளியேறி இருப்பது ஆறுதல் அளிக்கிறது.
பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, எப்பொழுதும் மொழி உணர்வை, இன உணர்வை கொச்சைப்படுத்தி பேசுபவர் தான். அவ்வாறு பேசுவது அவருக்கு தனிப்பட்ட முறையில் வேண்டுமானால் விளம்பரம் தேடி தரலாமே தவிர அவர்கள் கட்சிக்கு எந்த பயனையும் தராது என்றார்.
முன்னதாக திருமாவளவன் விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் போது அவர் கட்சியினர் பானையை வைத்து அவரை வரவேற்றனர்.