வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 4 மே 2018 (20:39 IST)

உங்கள் அட்டுழியத்துக்கு ஒரு அளவே இல்லையா? நீட் தேர்வு மையம் குறித்து கார்த்திக் சுப்புராஜ்

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர்களுக்கு கேரளா, ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழக மாணவர்கள் தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்துள்ளது. 
 
இந்த நிலையில் சி.பி.எஸ்.இ அமைப்பின் இந்த பழிவாங்கும் நடவடிக்கைக்கு பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டுவிட்டரில் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு தெருக்களிலும் ஒயின்ஷாப் திறந்து வைக்க இடமிருக்கும் நிலையில் நீட் தேர்வு எழுத மட்டும் தமிழகத்தில் இடம் இல்லையா? உங்கள் அட்டூழியத்திற்கு ஒரு அளவே இல்லையா? இதை நான் கடுமையாக ஆட்சேபிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
 
மேலும் தமிழகத்தில் நீட் தேர்வைத் தடைசெய்’ என்பதில் இருந்து, ‘தமிழ்நாட்டில் நீட் தேர்வை நடத்துங்கள்’ என்ற நிலைக்கு கொண்டு வந்துவிட்டார்கள். இது ஒரு அருமையான விளையாட்டு. நம் குரல்களை அவர்கள் கவனத்தில் எடுத்துக் கொள்கிறார்களா? இல்லையா? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.