நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உதவி செய்யும் நடிகர் பிரசன்னா
இந்தியாவிலேயே தமிழக மாணவர்களுக்கு மட்டும் நீட் தேர்வு மையத்தை பிற மாநிலங்களில் சி.பி.எஸ்.இ ஒதுக்கியுள்ளது. தமிழக மாணவர்கள் சுமார் 10ஆயிரம் பேர் கேரளா, ஆந்திரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது
கேரளா, ஆந்திரா மாநிலங்களாவது தமிழகத்தின் பக்கத்து மாநிலங்கள் என்பதால் மாணவர்களுக்கு பெரிய சிரமம் இருக்காது. ஆனால் ராஜஸ்தான் சென்று நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் நிலை தான் பரிதாபம். சென்னையில் இருந்து சுமார் 36 மணி நேரம் பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நீட் தேர்வுக்காக வெளி மாநிலம் செல்லும் 2 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு போக்குவரத்து வசதி செய்து தருவதாக நடிகர் பிரசன்னா தனது டுவிட்டரில் அறிவித்துள்ளார். மாணவர்கள் தங்களது ஹால் டிக்கெட் விபரங்களை தன்னிடம் தெரிவித்தால் அவர்களுக்கு ரயில் டிக்கெட் எடுத்து தருவதாக கூறியுள்ளார். பிரச்சன்னாவின் இந்த உதவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.