திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 4 மே 2018 (20:38 IST)

தெருவுக்கு தெரு டாஸ்மாக் ; நீட் தேர்வு மையம் அமைக்க முடியாதா? - கார்த்திக் சுப்புராஜ் காட்டம்

நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு கேரளா, ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

 
தமிழகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்க உத்தரவிட முடியாது என உச்ச நீதிமன்றமும் கைவிரித்து விட்டது. 
 
இந்நிலையில், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில் “தமிழகத்தில் தெருவுக்கு தெரு டாஸ்மாக் மதுபானக் கடைகள் இருக்கிறது. ஆனால், நீட் தேர்வு எழுத இடமில்லை. அட்டூழியங்கள் எல்லை மீறி போய்க்கொண்டிருக்கிறது. கடுமையான கண்டனங்கள். நீட் தேர்வை தடை செய்ய வேண்டும் என்கிற போராட்டத்தை மாற்றி, தமிழகத்தில் நீட் தேர்வை நடத்துங்கள் என கேட்க வைத்து விட்டார்கள். என்ன ஒரு விளையாட்டு. நம் குரல்கள் கேட்கவில்லையா?” என டிவிட் போட்டுள்ளார்.