1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Karaikal school boy murdered by another students mother

மதிப்பெண்களால் வந்த விரோதம்? சிறுவனை விஷம் வைத்து கொன்ற பெண்! – காரைக்காலில் அதிர்ச்சி!

Karaikal
தன் மகளை விட அதிகம் மதிப்பெண் எடுத்த சிறுவனை பெண் ஒருவர் விஷம் கொடுத்து கொன்ற சம்பவம் காரைக்காலில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காரைக்காலில் உள்ள நேரு நகரை சேர்ந்த ராஜேந்திரன் – மாலதி தம்பதியினரின் மகன் 13 வயதாகும் பால மணிகண்டன். பால மணிகண்டன் கோட்டுச்சேரியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வந்துள்ளான்.

சமீபத்தில் பள்ளி ஆண்டு விழா ஒத்திகை முடிந்து வீட்டுக்கு வந்த பால மணிகண்டன் மாலதி கொடுத்த குளிர்பானத்தை குடித்ததாகவும், அதனால் மயக்கமாக வருவதாகவும் கூறியுள்ளாம். இதனால் குழப்பமடைந்த மாலதி தான் எந்த குளிர்பானமும் கொடுக்கவில்லையே என விசாரிக்க, அவர் கொடுத்ததாக பள்ளியின் செக்யூரிட்டி குளிர்பானம் கொண்டு வந்து கொடுத்தது தெரிய வந்துள்ளது.


மயங்கிய சிறுவனை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் விஷம் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. சிறுவனின் தாய் மாலதியும், தந்தை ராஜேந்திரனும் பள்ளி நிர்வாகத்திடம் சென்று இதுபற்றி புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் பள்ளி செக்யூரிட்டி தேவசாஸை அழைத்து விசாரித்தபோது மேலும் சில தகவல்கல் கிடைத்துள்ளன.

பள்ளியின் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்தபோது பால மணிகண்டனின் வகுப்பில் படிக்கும் மற்றொரு சிறுமியின் தயார்தான் அந்த குளிர்பானத்தை கொடுத்தார் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து போலீஸில் புகாரளித்த மாலதி தன் மகன் பால மணிகண்டன் வகுப்பில் நல்ல மதிப்பெண் எடுத்து வந்தது பிடிக்காமல் சக மாணவியின் தாயார் விஷம் கொடுத்திருப்பதாக புகாரளித்துள்ளார்.

இந்நிலையில் சிறுவன் பால மணிகண்டன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதனால் ஆத்திரமடைந்த உறவினர் மருத்துவமனையை தாக்கியுள்ளனர். விஷம் கொடுத்த பெண்ணை கைது செய்ய வேண்டுமென மறியலில் ஈடுபட்டுள்ளனர். மாணவியின் தாயாரை கைது செய்துள்ள போலீஸ் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
தரையிறங்க தெரியாதா? வில்லனாக கிளம்பிய விமானி! காமெடியனாகிய சம்பவம்!