வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 30 ஆகஸ்ட் 2022 (14:17 IST)

மகள் வன்கொடுமை; புகாரளிக்க சென்ற தாயும் வன்கொடுமை! – போலீஸ் அதிகாரி கைது!

girl abuse
உத்தர பிரதேசத்தில் மகள் வன்கொடுமை செய்யப்பட்டதாக புகார் அளிக்க வந்த தாயை போலீசே வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் கன்னோஜ் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் சமீபத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளார். இதை அவரது தாயாரிடம் சொல்ல அதிர்ச்சியடைந்த அவர் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடைபெற்று வந்த நிலையில் அக்காவல் நிலையத்தில் காவலராக பணிபுரியும் அனூப் மவுரியா என்பவர் ஆவணங்கள் சிலவற்றில் கையெழுத்து போட வேண்டும் என இளம்பெண்ணின் தாயாரை வீட்டுக்கு வர சொல்லியுள்ளார்.

இதனால் அவரது வீட்டுக்கு சென்ற பெண்ணை காவலர் அனூப் மவுரியா பாலியல் வன்கொடுமை செய்ததுடன், வெளியே சொல்லக்கூடாது என மிரட்டியுள்ளார். ஆனால் அந்த பெண் இதுகுறித்து புகார் அளித்துள்ளார். அதன்பேரில் அந்த போலீஸ் அதிகாரி செய்யப்பட்டுள்ளார். மகள் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து புகார் அளிக்க சென்ற தாயும் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.