புதன், 8 பிப்ரவரி 2023
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified சனி, 3 செப்டம்பர் 2022 (18:59 IST)

மகளைவிட நன்றாகப் படித்த மாணவன்: சக மாணவியின் பெற்றோர் செய்த கொடூர செயல்!

தம் மகளை விட  நன்றாகப் படிக்கும் மாணவனுக்கு விஷம் கலந்த குளிர்பானம் கொடுத்த மாணவியின் பெற்றோர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

காரைக்காலில் வசித்து வருபவர் மாணவர் மணிகண்டன். இவர்  அங்குள்ள பள்ளியில்  8 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். அவருடன் அதே வகுப்பில் படித்து வரும் ஒரு மாணவியைவிட மணிகண்டன்  நன்றாகப் படித்து, அதிக மதிப்பெண் பெற்று வந்ததாகத் தெரிகிறது.

ஆனால், மாணவியால் மணிகண்டனை படிப்பில் மீறமுடியவில்லை என தெரிகிறது. இந்த நிலையில், பள்ளி ஆண்டு விழா ஒத்திகையில் கலந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பிய  மணிகண்டன் வாந்தி, மயக்கத்துடன் கீழே  விழுந்தார். அதன்பின் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த நிலையில், பெற்றோர் பள்ளிக்குச் சென்று விசாரித்தனர். அங்கிருந்த சிசிடிவியில் சக மாணவியின் பெற்றோர் குளிர்பானம் தரும் காட்சிகள் இருந்தது. தன் மகளைவிட நன்றாகப் படிக்கும் மணிகண்டன் மீதான பொறாமையின் இந்த செயலில் ஈடுபட்டதாகத் தெரிகிறது, இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.